POCSO Awareness Programme
கல்லூரியின் உள் புகார்க் குழுவும் போதை தடுப்பு விழிப்புணர்வு குழுவும் இணைந்து 12.12.25 அன்று நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குகல்லூரி இயக்குநர் முனைவர் உ. சுபத்ரா மற்றும் கல்லூரி முதல்வர் த. முருகானந்தம் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி துணை முதல்வர் பாபு அவர்கள் கலந்து கொண்டார்.முனைவர் பா.அமுல் சோபியா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உதவி – ஆய்வாளர் அமுதா மாணவர்களிடையே பேசும்போது, போதைப்பொருள்,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு அரசு வழங்கி வரும் கல்விச் சலுகைகள் குறித்தும் பேசினார். கைப்பேசி, முகநூல், புலனக் குழுக்களில் பெண் குழந்தைகள் தங்களது புகைப்படம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்திய உதவி ஆய்வாளர் அமுதா சமூக குற்றங்களில் எவரேனும் ஈடுபட்டால் உடனடியாக புகார் தெரிவிக்க அவசர உதவி எண் 100, பாலியல் குற்றங்கள் தொடர்பாக 1098,சைபர் குற்றங்களுக்கு 1930 போன்ற எண்களைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றும் அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி பேராசிரியர் முரளி அவர்கள் நன்றி கூறினார்.
POCSO Awareness Programme Read More »

