கம்பனால் பெரிதும் காதலிக்கப்பட்ட பாத்திரம் வாலியா? கும்பகர்ணனா? இராவணனா? – சிறப்புப் பட்டிமன்றம்
நம் கல்லூரியில் சிறப்புற செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த்துறையின் ‘மதுர மாலோலன் தமிழ் மன்றம்’ சார்பாக 20/8/2026 அன்று கம்பராமாயணத்தை சிறப்பிக்கும் விதமாக” கம்பனால் பெரிதும் காதலிக்கப்பட்ட பாத்திரம் வாலியே கும்பகர்ணனே ராவணனே” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர்கள் மற்றும் கணிதத் துறை பேராசிரியர் தமிழ்த்துறைத் மற்றும் கணினி அறிவியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்புற உரை நிகழ்த்தினார். நிகழ்வின் நடுவராக சகுந்தலையின் இரா.சீ . பரதன் கலந்துகொண்டு தீர்ப்பினை வழங்கினார். முன்னதாக நிகழ்வில் கல்லூரியின் இயக்குநர் முனைவர் உ. சுபத்ரா அவர்கள் தலைமையேற்று தலைமையுரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் த. முருகானந்தம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.
