SRI MALOLAN COLLEGE OF ARTS AND SCIENCE – (Affiliated to University of Madras), Mocheri Road, Madurantakam, Chengalpattu District – 603306

கண்ணதாசனின் நூற்றாண்டு விழா – சிறப்புப் பட்டிமன்றம்

கண்ணதாசனின் நூற்றாண்டு விழா – சிறப்புப் பட்டிமன்றம்

நம் கல்லூரியில் சிறப்புற செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த்துறையின் ‘மதுர மாலோலன் தமிழ் மன்றம்’ சார்பாக 10/10/2026 அன்று கண்ணதாசனின் நூற்றாண்டை சிறப்பிக்கும் விதமாக   ” கண்ணதாசனின்  நிலைத்தப் புகழுக்குக் காரணம்  காதல் பாடல்களே! தத்துவ பாடல்களே” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள்  கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். நிகழ்வின் நடுவராக கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத்  துறையின் பேராசிரியர் ஏ.சி. கோதண்டராமன்  கலந்துகொண்டு தீர்ப்பினை வழங்கினார். முன்னதாக நிகழ்வில் கல்லூரியின் இயக்குநர் முனைவர் உ. சுபத்ரா அவர்கள் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் த. முருகானந்தம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.

wpChatIcon
wpChatIcon
Scroll to Top