ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் கணித்தமிழ் பேரவையின் சார்பாக மாணவர்களுக்கான “இணையதள பயன்பாடுகள் மற்றும் இணையதள உருவாக்கம்” தொடர்பான ஒரு நாள் பயிலரங்கம் கணினி பயிற்றுனர் திரு. A . கார்த்திக் M.E (Computer Science) அவர்களால் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வின் முடிவில் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வினை கல்லூரியின் முதல்வர் .முனைவர் உ.சுபத்ரா அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.
கல்லூரியின் தமிழ் துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர் முனைவர் .அமுல் சோபியா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தமிழ்த் துறை சார்ந்த பேராசிரியர்கள் திருமதி .நாதேவி, முனைவர் .ஸ்ரீதேவி, திருமிகு. சுந்தரவர்தன் அவர்கள் ,முனைவர் பிரபு ,செல்வி. கலைச்செல்வி, செல்வி சௌமியா அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு கலந்து கொண்டனர் செல்வி அனுபிர்தி அவர்கள் நன்றியுரை வழங்கினார்